பிக்பொஸ் வீட்டுக்குள் வெள்ளம்!


 உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது தமிழ்நாட்டின் சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது.

போட்டியாளர்கள் உள்ளே தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் பிக்பொஸ் வீட்டில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரி இந்த இடத்திற்கு மிக அருகில் இருக்கிறதாம். ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, புயல் காற்று, விடாத மழை என தண்ணீர் புகுந்ததால் போட்டியாளர்கள் பயத்தில் மூழ்கினர்.

“மேலும் நாங்கள் வெளியேறிக்கொள்கிறோம், எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்” என போட்டியாளர்கள் கேட்க உடனே அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு இன்று(26) மாலை 4 மணிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியில் தங்கவைப்பட்டுள்ளனர்.

இன்று(26) இரவு தான் அவர்கள் மீண்டும் பிக்பொஸ் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்களாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.