இலங்கையில் நேற்றைய தினம் கொரோனாவால் பலியான 27 வயது பெண்!


 இலங்கையில் நேற்றைய தினம் (19) கொரோனாவால் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி கொழும்பு 15 பகுதியைச் சேரந்த 27 வயது பெண் ஒருவர் பலியானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் கண்டறியப்பட்ட பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றால் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினையே மரணத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த மற்றுமொருவரும் உயிரிழந்தார். கொழும்பு – 10 பகுதியில் வசிக்கும் 70 வயது நபரே உயிரிழந்தவராவார். இவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததுடன் இவருக்கு கொவிட் நோய்த்தொற்றுடன் நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டமை மரணத்துக்கு காரணமாகியுள்ளது.

இதேவேளை களுத்துறை பகுதியில் இரு மரணங்கள் பதிவாகின. குறித்த பகுதியில் வசிக்கும் 59 வயது பெண் தனது வீட்டில் இறந்துள்ளார். இவருக்கு கொவிட் நோயுடன் உயர் இரத்த அழுத்தமும் காணப்பட்டுள்லமை இறப்புக்கு காரணமாகியுள்ளது.

மற்றுமொருவர் களுத்துறை – ஹத்தோட்டாவைச் சேர்ந்தவர். 36 வயதான இந்த நபர் வீட்டில் இறந்ததாக கூறப்பட்டுள்ளதுடன் கொவிட் நோய்த்தொற்றால் மார்பில் ஏற்பட்ட நோய்த்தொற்று இவருக்கான மரணத்தின் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நான்கு மரணங்களுடன் சேர்த்து இதுவரை மொத்தமாக மரணமடைந்தோர் தொகை 73 ஆக உயர்ந்துள்ளது.

Blogger இயக்குவது.