நாய் பிடிக்கும் யாழ் மாநகர சபை!


 யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் கட்டாக்காலி நாய்களைப் பிடிக்கும் பணியை யாழ். மாநகர சபை மீள ஆரம்பித்துள்ளது.

இன்று காலை நல்லூர் பகுதியில் யாழ். மாநகர சபையின் லாண்ட் மாஸ்டர் ஒன்றில் கூடுகளுடன் வந்த மாநகர சபைப் பணியாளர்களில் வீதிகளில் கட்டாக்காலிகளாகக் காணப்பட்ட நாய்களைப் பிடித்துச் சென்றதைக் காணமுடிந்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், நாய்களைப் பிடித்து அழிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் உள்ளூராட்சி சபைகளினால் கட்டாக்காலி நாய்களைப் பிடிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், கட்டாக்காலி நாய்களைப் பிடித்து நாய்கள் காப்பகத்தில் வைத்துப் பராமரிப்பதற்காகவே யாழ். மாநகர சபையினால் இந்தப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறு பிடிக்கப்படும் நாய்களை அரியாலைப் பகுதியில் உள்ள தியாகி அறக்கொடை நிலைய நாய்கள் காப்பகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.