டிஎல் முறையில் வென்றது நியூசி!


 மேற்கிந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ரி-20 தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று (27) இடம்பெற்ற இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் 16 ஆக குறைக்கப்பட்டது. இதன்படி முதலில் ஆடிய மேற்கிந்திய அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் கிரன் பொலார்ட் 37 பந்தில் 75, அன்ரு ப்ளெச்சர் 34 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் லொக்கி பெர்குசன் 5 விக்கெட்களை கைப்பற்றினர்.

176 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 15.1 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டது

அணி சார்பில் ஜேம்ஸ் நீசம் 48, டெவோன் கொன்வே 41 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஓசானே தோமஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.