கைதான யாழ் பல்கலை மாணவன் விடுவிப்பு!


 யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயிலில் கார்த்திகை தீபமேற்ற முயன்ற போது இன்று இரவு 7.45 மணிக்கு கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விஞ்ஞான பீட மாணவன் சற்றுமுன் விடுவிப்பு.

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் இருவரும் மாணவனை விடுவிக்க பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்தினர்.

இந்நிலையில் மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் பொலிஸார் அவரை விடுவித்தனர்.

இதேவேளை, மாணவன் கைது பற்றி அறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தோடர்புகொண்டு மாணவனின் விடுதலையை வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.