கடலலையில் சிக்கிய ஒருவரது சடலம் மீட்பு!


 காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது-19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது-19) என்ற இருவருமே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவர் இன்று மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.