3 நாளின் பின் இடிபாடுகளிற்குள்ளிருந்து மீட்கப்பட்ட குழந்தை!


 துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்களிற்குள் இருந்து மூன்று நாட்களின் பின்னர் இரண்டு சிறுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் கிரேக்கத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் பெரும் அனர்த்தம் நிகழ்ந்தது.

துருக்கியின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்மிரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81 ஐ எட்டியுள்ளது.

கிரேக்க தீவான சமோஸின் வடகிழக்கில் ஏஜியன் கடலை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துருக்கியின் இஸ்மிரில் 79 பேர் கொல்லப்பட்டனர்.

துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரகால அதிகாரசபையின் (AFAD) தகவல்படி, தற்காலிக தங்குமிடமாக 3,500 க்கும் மேற்பட்ட கூடாரங்களும் 13,000 படுக்கைகளும் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட 740 க்கும் மேற்பட்டோர் இதுவரை மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று திங்கள்கிழமை அதிகாலை, நிலநடுக்கம் ஏற்பட்ட 65 மணி நேரத்திற்குப் பிறகு, மேற்கு இஸ்மிர் மாகாணத்தின் பேராக்லி மாவட்டத்தில் இடிபாடுகளிற்கிடையிலிருந்து மூன்று வயது எலிஃப் பெரின்செக் மீட்கப்பட்டார்.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 106 வது நபர் எலிஃப் என்றும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.