ட்ரம்ப் நடத்திய பிரசாரக் கூட்டங்களால் 30,000 பேருக்கு கொரோனா!


 அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் காரணமாக, சுமாா் 30,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவா்களில் 700 போ் உயிரிழந்திருப்பதாகவும் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் செப்டம்பா் மாதம் 22 ஆம் திகதி வரை ட்ரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிகபட்ச அளவில் கொரோனா நோய்த்தொற்று பரவியுள்ளதாகவும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் 700 கொரோனா மரணங்களுக்கு அந்தக் கூட்டங்கள் காரணமாக இருக்கலாம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.