இளம் இசையமைப்பாளர் மரணம்!
இந்த வருடம் உலகத்திற்கு மட்டுமல்ல திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்புகளை தந்துள்ளது. ஆம் சுஷாந்த் சிங், விசு, எஸ்.பி.பி, வடிவேல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இந்த வருடம் நம்மைவிட்டு பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் இளம் இசையமைப்பாளர் நவின் சங்கர் என்பவர் நேற்று இரவு மரணமடைந்துள்ளார். இந்த செய்தி தமிழ் திரையுலகை அதிர்ச்சியாக்கியுள்ளது.
அவர் திடீரென நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகிறது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் மூளையில் ரத்தம் உறைந்திருப்பது காரணமாக மரணமடைந்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
இவர் ‘விசிரி’ படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை