50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை!


 ஆப்பிரிக்க நாட்டொன்றில் , 50 க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதக் குழுவான ஐ.எஸ் அமைப்பு வடக்கு மொசாம்பிக்கில் உள்ள கபோ டெல்கடோ பிராந்தியத்தின் நஞ்சாபா கிராமத்தில் இந்த பயங்கர அட்டூழியத்தை நிகழ்த்தி உள்ளது.

பயங்கரவாதிகள் ஒரு கால்பந்து மைதானத்தை தங்கள் கொலைக் களமாக மாற்றி அங்குள்ள கிராம மக்களை தலைகீழாக தொங்கவிட்டு தலைகளை வெட்டி கொன்றதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மாகாணத்தில் ஆண்டுதோறும் குறைந்தது 2,000 பேர் கொல்லப்படுகிறார்கள் என்ரும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அங்கு வாழும் 400,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல்களில் சமீபத்திய தாக்குதல்கள் மிக மோசமானது என்று கூறப்படுகிறது.

மொசாம்பிக் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கபோ டெல்கடோ பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தாக்குதல்களின் மூர்க்கத்தன்மை உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.