என்னவனே -கவிதை!!

 


என்னவனே

உனக்காக பல கவிதைகள்
எழுதி விட்டேன்....
எதுவுமே
உன்னை வந்து
சேரவில்லையா...
முகவரி
மாற்றி விட்டாயா...
இல்லை
என் முகம்தான்
மறந்து விட்டாயா....
காத்திருக்கும்
நொடிகளெல்லாம்
கவிதைகளாய்
கரையுதடா...
உறைந்து போன
உன் காதலை
எப்படியடா
உருக வைப்பது...
உன்னை நினைத்து
என் உயிரும்
உறைந்தே போனதடா...
உலகத்தில்
எதுவுமே
பிடிக்கவில்லையடா..
உன் உருவம்
கண்ட பின்பு...
வெள்ளை மனம்
கொண்டவனே
என் மனம்
உணரவில்லையா...
கள்ளமின்றி சிரிப்பவனே
என் கன்னங்களில்
கண்ணீர் தீண்டி
போவது புரியவில்லையா...
காரணமே இன்றி
உன்னை காதலிக்கும்
என் கண்களை
குருடாக்கிக் கொள்ளவா...??
சதா சர்வ காலமும்
உன்னை நினைக்கும்
என் இதயத்தை
இரும்பாக்கி கொள்ளவா...??
தென்றல் தீண்டாத
மலரைப் போல்....
உன் கண்கள் தீண்டாத
கவிதை நான்....
உன்னை எப்படி
காதலிப்பது...
எனக்கு
தெரியவில்லையடா...
உனக்கு தெரிந்தால்
கொஞ்சம்
சொல்லிப் போ....
காதல் காவியங்கள்
பல படித்து விட்டேன்....
இரவுகளை வெறுமையாய்
நகர்த்திவிட்டேன்....
நீ வருவாய் என
காத்திருக்கிறேன்....
என் காதலே
காவியம் படைக்க வா..!! 💚

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.