நேற்று 625 பேருக்கு தொற்று!
நாட்டில் நேற்று (11) 625 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், திவுலபிட்டி- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இதன்படி திவுலபிட்டி- பேலியகொட கொத்தணி 11,858 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நாட்டின் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 15,340 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 5,121 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 10,183 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 523 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை