785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!
பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (17) காலை ´தெரண அருண´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை