வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி பெறுமதியான நகை, பணத்தை கொள்ளையிட்ட குழு!
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட கரணவாய் கிராமத்தில் முகமூடி அணிந்த திருடர்கள் குழு ஒன்று கூரிய ஆயுதங்களுடன் பூசகர் ஒருவரின் வீடு புகுந்து வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தினைத் திருடிச் சென்றுள்ளது.
கடந்த இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த வீட்டின் வெளிப் பகுதியில் முதியவர் ஒருவர் வழமையாக உறங்குவது வழக்கம். அவரை எழுப்பிய திருட்டுக் கும்பவர் அவரைக் கடுமையாகத் தாக்கி கதவைத் திறக்க வைத்திருக்கின்றது.
அதன் பின்னர் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த அனைவரையும் தாக்கி அவர்களையும் ஒரு இடத்தில் இருத்திவிட்டு, வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளது.
அங்கிருந்த 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான நகை 30 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான பணம் என்பவற்றை திருடியதுடன், அதே காணியிலிருந்த மற்றொரு வீட்டையும் திறக்கச் செய்து அதன் உள்ளேயும் தேடுதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
அங்கு வந்த திருடர்கள் வாள், கத்தி உட்பட்ட கூரிய ஆயுதங்களை வைத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
பொலிஸார் இரு வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரியவருகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை