9,000 தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைக்க திட்டம்!


 வடக்கிலிருந்து 9,000 பேரை இராணுவத்திற்கு இணைக்கும் புதிய திட்டத்தை அரசு ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தெரிய வந்துள்ளது.

திட்டத்தின்படி யாழ் மாவட்டத்தில் இருந்து 4,500 பேரும், வடக்கின் ஏனைய பகுதிகளில் இருந்து 4,500 பேரும் இராணுவத்தில் இணைக்கப்படவுள்ளனர்.

இவர்கள் நேரடி இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். இராணுவ உதவிப்பணியாளர்களாக மேசன், தச்சு வேலைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மாதச்சம்பளமாக சுமார் 60,000 வரை அவர்கள் பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Blogger இயக்குவது.