ட்ரம்ப் தோல்வியை ஏற்க தயங்குவது வெட்கக்கேடானது!!


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது தோல்வியை ஏற்க தயங்குவது வெட்கக்கேடான விடயம் என ஜோ பிடன் கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் அவரது அதிகாரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க சட்ட மா அதிபர் அனுமதியளித்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்திருந்தார்.

அத்தோடு தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.