புத்தளத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் சிறுவனின் உடல் மீட்பு!

 


புத்தளம் புதிய எலுவன்குளம் பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த சேலைன் குழாயில் கழுத்து இறுகி சிறுவன் ஒருவன் பரிதாகமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 09 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவன் மதிய உணவு உட்கொண்ட பின்னர் விளையாடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

இதன்போது சிறுவனின் தாய் தனது இரண்டாவது மகனுக்கு மதிய நேர உணவைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது சிறுவன் வீட்டு வளவுக்குள் உள்ள கொய்யா மரத்தில் கட்டப்பட்டிருந்த (intravenous infusion set) சேலைன் குழாயில் கழுத்து இறுகி தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த தாயின் அழுகுரலைக் கேட்ட அயலவர்கள் அங்கு வருகை தந்து, சிறுவனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது

பிரேத பரிசோதனையில் குறித்த சிறுவன் கழுத்து இறுகியமையால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுவனின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

அத்தோடு இது கொலையா இல்லை சிறுவனின் விபரீத செயலால் ஏற்பட்டதா என தெரியவரவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.