கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற உதவும் கூகுள் வரைபடம்!


கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள இடங்களை கூகுள் வரைபடத்தில் (Google Map) சுட்டிக்காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகள் குறித்த பிரதேசங்களில் பயணம் செய்வதனை தவிர்க்க முடியும் அல்லது அவதானமாக செயற்பட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வசதியானது அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான கூகுள் வரைபட அப்பிளிகேஷன்களில் தரப்படவுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவலடைந்து வரும் நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கமைய தொழில்நுட்ப நிறுவனங்களும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதில் முனைப்பாகவுள்ளன. இந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் தனது வரைபட வசதி மூலம் பயனர்களுக்கு உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.