இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட மருந்து!


தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தியிருப்பதாக மண்டபம் கடலோர காவல்படைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை முதல் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரையிலான வடக்கு கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை ஓரத்தில் உள்ள முள் புதர் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக ஒரு மூட்டை மறைத்து வைக்கப்பட்டிருந்தது அதனை எடுத்து சோதனை செய்தபோது அதில் இலங்கை கடத்துவதற்காக நோய் எதிர்ப்பு மருந்துகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கடலோர காவல் படையினர் அதனை மீட்டு மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு எடுத்து வந்து சோதனை செய்ததில் மூட்டையில் 1200 மருந்து அட்டைகளில் மொத்தமாக 6 ஆயிரம் மருந்து பாட்டில்கள் இருந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மருந்து குறித்து மருத்துவத்துறையினரிடம் விசாரித்த போது இந்த மருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இலங்கையில் இந்த மருந்து கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளதால் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்த பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மருந்தின் இந்திய மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் எனவும் சர்வதேச இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 14 லட்ச ரூபாய் என இருக்கலாம் என இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.