அமைச்சின் சுற்றுலா விடுதிக்குள் இருந்த கொரோனா நோயாளிகள்!!
மின்னேயா சுற்றுலா பங்களா ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலனறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் அரசியல்வாதி ஒருவர் நேரடியாக தொடர்புபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலனறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிக்கையில்.
சந்தேக நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
குறித்த நபர்கள் மாத்தறை பகுதியில் வசிப்பவர்கள் என்றும் Ministry of Fisheries சேர்ந்த ஒரு சுற்று பங்களாவில் பதுங்கி இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இவர்களுடன் தங்கியிருந்த மேலும் 4 பேர் கொரோனா பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் , மூன்று பேர் சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஒரு அரசியல்வாதி சுகாதார சேவைகளைத் தவிர்ப்பதிலும், இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை இரகசியமாக வைத்திருப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலனறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை