சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில் ஆசிரியருக்கு கொரோனா என சந்தேகம்!


வவுனியா- சிதம்பரபுரம்,  நாகராசா வித்தியாலயத்தில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற  சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் காரைநகரில் இடம்பெற்ற அந்தியெட்டி நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தார்.

குறித்த  நிகழ்விற்கு, கொழும்பில் தொற்றுக்குள்ளான ஒருவரும் கலந்து கொண்டிருந்ததார். சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில்  கல்வி கற்பிக்கும் ஆசிரியர்  அந்நிகழ்வுக்கு சென்று வந்துள்ளார்.

ஆகவே இந்த ஆசிரியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. எனவே குறித்த  பாடசாலை மூடப்படுமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார திணைக்களத்தினர் மற்றும் கல்வித்திணைக்களத்தினர் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக கல்வி பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த ஆசிரியர் அந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாகவும், குறித்த அந்தியொட்டி நிகழ்வுக்கு தொற்றுக்குள்ளான நபர் கலந்துகொள்ள முன்னர்தான், அவ் இடத்திலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் ஆசிரியர்  கூறியுள்ளார்.

இருப்பினும்  குறித்த ஆசிரியருக்கான பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம் பாடசாலை மூடுவதா? இல்லையா? என்பது தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர்களிடம் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த பாடசாலையில் இன்று நூறு மாணவர்களின் வரவு இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.