அடையாளம் காணப்பட்ட 496 கொரோனா நோயாளிகள் தொடர்பான விபரம்!
இலங்கையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 496 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 167 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 56 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு புத்தளத்தில் 53 பேரும் குருநாகலில் 09 பேரும் களுத்துறை மற்றும் இரத்தினபுரியில் தலா 08 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கண்டியில் 06 பேரும் கேகாலை மற்றும் அம்பாறையில் 05 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு நுவரெலியா மற்றும் மன்னாரில் தலா 4 பேருக்கு பதுளை மற்றும் காலியில் தலா 3 பேருக்கும் அனுராதபுரம் மற்றும் பொலநறுவையில் 2 பேரும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டையில் தல ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 17 ஆயிரத்து 02 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 366 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 116 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை