மரண சடங்கிற்கு வந்தவரால் 43 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!
கிளிநொச்சி - திருவையாற்றில் மரண வீட்டிற்கு கொழும்பிலிருந்த வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சுமார் 43 குடும்பங்களை சேர்ந்ந்த 169 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், மரண வீட்டில் கலந்துகொண்டவர்களை தேடும் பணியை சுகாதார பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் இருந்து திருவையாறு மரண நிகழ்விற்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மரண வீட்டிற்கு சென்ற அயலவர்கள், உறவினர்கனின் வீடு என இதுவரை பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரிகைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டபோது 7 பேர் மட்டுமே சடலத்தை எடுத்துச் செல்ல சுகாதாரத் தரப்பினர் அனுமதி வழங்கினர்.
இதேநேரம் கொழும்பில் இருந்து வருகை தந்தவர் கொழும்பில் இருந்து வவுனியா வந்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் கிளிநொச்சி வரை பயணித்து இரணைமடுச் சந்தியில் இறங்கி அங்கிருந்து நீல நிற முச்சக்கர வண்டியில் வீடு நோக்கிப் பயணித்துள்ளார்.
இதன் காரணமாக அவரை ஏற்றிச்சென்ற நீல நிற முச்சக்கர வண்டி தேடப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் தனியார் பேரூந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை