தீபாவளி வித்தியாசமாக கொண்டாடும் வேல்ஸ்!


இந்த ஆண்டு வேல்ஸில் தீபாவளி கொண்டாட்டங்கள் கொவிட் கட்டுப்பாட்டின் கீழ் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று விழாக்களில் பங்கேற்பவர்கள் கூறுகின்றனர்.

விளக்குகளின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவாளி, ஐந்து நாட்களாக உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான இந்து, சீக்கியர்கள் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படுகிறது.

கார்டிஃப் நகரில் பட்டாசு காட்சிகள் உள்ளிட்ட, வெளிப்புற கொண்டாட்டங்கள் பிரித்தானியாவை சுற்றியுள்ள பகுதிகளில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், வேல்ஸில் உள்ள இந்துக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே கொண்டாடுகின்றனர்.

இங்கிலாந்தில், ஒரு முழு மாத முடக்கநிலை என்பது குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு வெளியே ஒன்றுகூடவோ அல்லது கோவில்களில் விழாக்களில் கலந்து கொள்ளவோ முடியாது என்பதாகும்.

இதுகுறித்து வேல்ஸ் இந்து சபையின் துணைத் தலைவரான கர்சன் வாகனி கூறுகையில், ‘வேல்ஸில் இங்குள்ள ஃபயர் பிரேக் முடக்கிலையில் இருந்து நாங்கள் வெளியே வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இது இன்னும் முடக்கநிலையாக இருந்தால், அது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்திருக்கும். தீபாவளி என்பது குடும்பமும் சமூகமும் ஒன்றிணைவது பற்றியது’ என கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.