முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!!


தென் கொரியாவில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 100,000 வொன் (89.75அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதிக்கப்படுகின்றது.

தென் கொரியாவில் கடந்த 70 நாட்களாக இல்லாத வகையில் தினசரி கொவிட்-19 நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது 205 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இது முதல் தடவையாக 200க்கு மேல் பதிவாகியுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (கே.டி.சி.ஏ) தெரிவித்துள்ளது.

புதிய தொற்றுகளில், 166 உள்நாட்டில் பதிவாகின. 39வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு உறுதிசெய்யப்பட்டன.

உள்நாட்டில் பரவும் தொற்றுகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவை சியோல் மற்றும் கியோங்கி மாகாணத்திலிருந்து வந்தவை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.