கொரோனாவை கட்டுப்படுத்த என்னை பலிகொடுப்பேன் -அமைச்சர் பவித்திரா ஆவேசப் பேச்சு!!

 


உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார செயற்பாடுகளையும் தாண்டிய விதத்தில் எமது நாட்டின் சுகாதாரத்துறையின் தரம் உள்ளதாகவும் அதனால் கொவிட் -19 வைரஸ் பரவலை வெற்றிகரமாக கையாள முடியுமாக உள்ளதாக சபையில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இந்த கொவிட் -19 வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த என்னையே பலிகொடுக்க தயாராக உள்ளேன் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபை அமர்வுகள் கூடிய வேளையில் சுகாதார அமைச்சர் உரையின் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவல் முதல் தடவையாக நாட்டில் பரவ ஆரம்பித்த நிலையில் அதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதுடன், இரண்டாம் பரவல் இப்போது பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனையும் வெற்றிகரமாக கட்டுப்படுத்த செயற்பட்டுக்கொண்டுள்ள இந்த நிலையில், இப்போது வரையில் நாட்டின் நிலைமைகளை எம்மால் வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்றால், அதற்கு எமது பலமான சுகாதாரத்துறையே காரணமாகும்.

சுகாதாரத் துறையில் உள்ள சகல அதிகாரிகளிடம் உள்ள உயர்மட்ட அறிவும், உயரிய திறமையுமே இப்பொது வரையில் எம்மால் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வெற்றிகரமாக செயற்பாடுகளை முன்னோக்கி செல்லக்கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக சொல்வதாயின் உலக சுகாதார ஸ்தாபனம் முன்வைத்துள்ள சுகாதார அறிவுறுத்தல்களுக்கும் மேலாக எமது சுகாதார சேவை காணப்படுகின்ற காரணத்தினால் தான் இவ்வாறான ஆரோக்கியமான நிலையில் உள்ளோம்.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். மத நம்பிக்கைகளுக்கு கட்டுப்பட்ட நாட்டவர் என்ற ரீதியில் பெளத்த கடமைகளுக்கும், ஏனைய மத கடமைகளுக்கும் நாம் முன்னுரிமை கொடுத்து ஒரு நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கிறோம். எனினும் முகப்புத்தகத்தில் சில விமர்சனங்கள் எதிர்கட்சியினரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பலிகொடுத்து கொவிட்டை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்கின்றார் என விமர்சனங்களை நான் முகப்புத்தகத்தில் பார்த்தேன். இந்த நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த என்னை ஆழ்கடலுக்கு பலிகொடுக்கவும் தயாராகவே உள்ளேன் என்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.