சிம்பாப்வேயிடம் சுப்பர் ஓவரில் வீழ்ந்தது பாகிஸ்தான்!


 சுற்றுலா சிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று நிறைவுற்றது.

இந்த தொடரை பாகிஸ்தான் அணி முன்னரே 2-0 எனக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இன்றைய கடைசிப் போட்டியில் சிம்பாப்வே அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் சீன் வில்லியம்ஸ் (118), ப்ரென்டன் டெய்லர் (58) ஓட்டங்களை பெற்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமட் ஹஸ்னைன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் பாபர் அசாம் (125), வஹாப் ரியாஷ் (52) ஓட்டங்களை பெற்றார். சிம்பாப்வே பந்துவீச்சில் பி.முஷாராபனி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து சுப்பர் ஓவரில் ஆடிய பாகிஸ்தான் 4 பந்தில் 2 ஓட்டங்களுடன் இரு விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து சிம்பாப்வே 3 பந்தில் 3 ஓட்டங்களை பெற்றி வெற்றியை தமதாக்கியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.