சுகாதார அமைச்சர் பவித்ராவின் பதவி நீக்கம்!!


சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் சுகாதார அமைச்ச்ர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் ஒழிப்பு திருப்தி ஏற்படும் வகையில் இல்லாமை, மக்களின் நம்பிக்கை வீழ்ந்துள்ளமை என்பன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மீதுள்ள விமர்சனங்களாகும்.

இந்த நிலையில் இவருக்கு சார்பாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட சிறு பிரிவினரே அமைச்சரவையில் ஆதரவாக பேசுகின்றதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷகூட அவருக்கு எதிரான கருத்தையே கொண்டுள்ளார் என்றும் அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த பதவிக்கு , அமைச்சர்கள் பலருடைய தெரிவாக பெருந்தோட்ட அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பத்திரன உள்ளார் என்று தெரியவருகிறது.

இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எம்.பி சீத்தா அரம்பேபொலவை பரிந்துரை செய்துள்ளதாகவும் , முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேயை பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வரவு செலவு திட்டம் நிறைவேறிய பின் இந்த அமைச்சரவை மாற்றமடையும் என்று அரச மட்ட தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.