ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யுமாறு அறிவிப்பு!!


கொரோனா வைரஸினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளிவரப்போதாக வெளிவந்த செய்திகளையடுத்து முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையும் மகிழ்ச்சிப் பிரவாகமும் புலப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் நோயினால் பீடிக்கப்பட்டு இறப்பதை விட தங்களது ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது பற்றியே முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த துயரடைந்திருந்ததாக சமூக ஆர்வலர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாம் எனும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதையும் முஸ்லிம் சமூகம் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் இந்த விவகாரம் முஸ்லிம்களின் ஆன்மீகப்பெறுமானத்தோடு உள்ள உணர்வு பூர்வமான அம்சம் என்பதால் முஸ்லிம்கள் மத்தியில் அந்தஅங்கலாய்ப்பு இருந்து வருவதாகவும் ஆர்வலர்கள் மேலும் தெரிவித்தனர்.

அதேவேளை மன்னார் மாவட்டத்தல் மாத்திரம் கொரோனா வைரஸினால் இறக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய வழிவகை செய்யாமல் அந்தந்த மாவட்டத்தில் ஒரு இடத்தில் நல்லடக்கம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.