டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100யை கடந்தது


டெல்லியில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மீண்டும் 100யை கடந்தது.

நேற்று (சனிக்கிழமை)  மாத்திரம் 111 பேர் உயிரிழந்ததால், இதுவரை வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,270 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், புதியதாக 5,879பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பிலுள்ள அனைவரையும், மருத்துவக் குழுக்கள் வீட்டிற்கே சென்று கண்காணிக்க அரசு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



Blogger இயக்குவது.