மலபார் போர்ப் பயிற்சி இன்றுடன் நிறைவடைந்தது!
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் மலபார் என்ற போர்ப் பயிற்சி இன்றுடன் நிறைவுக்கு வந்தது.
இவ்வாண்டின் இரண்டாம் கட்டமான இந்தப் போர்ப் பயிற்சி அரேபிக் கடலில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றது.
இதன்படி, போர்ப் பயிற்சியின் இறுதி நாளான இன்று இந்தியா மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன.
இதில், இந்திய விமானந்தாங்கிக் கப்பலான விக்ரமாதித்தியாவில் இருந்து மிக்-29 விமானங்களும், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலான நிமிட்சில் இருந்து எப்-18 விமானங்களும் தாக்குதல் ஒத்திகையை நடத்தியுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை