மஹிந்தவுக்கு மகன் யோஷித பிறந்தநாள் பரிசை! 

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது முதல் வேலையில் சம்பாதித்து வாங்கிய கார் மீண்டும் அவரிடமே சேர்க்கப்பட்டுள்ளது.

அப்போதைய காலக்கட்டத்தில் மஹிந்தவிடமிருந்து குறித்த காரை வாங்கிய எஸ்.ஏ. அமரசிரி என்பவரின் மகன் துமிந்த அமரசிரி மீண்டும் அந்த காரை மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார்.

பிரதமரின் பிறந்தநாள் பரிசாக இது வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், ஃபியட் கார் மீண்டும் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கார் எஸ்.ஏ. அமரசிரியின் முதல் கார் என்பதுடன் அவர் இந்தியாவில் ஒரு சர்வதேச கார் பந்தயத்தை வெல்ல அதைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.