தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை!!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வீரமாமுனிவரின் 340ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் ஜெயக்குமார் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமில்லை.
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.முக.அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை நிச்சயம் கைப்பற்றும்.
மேலும், அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை