முகக் கவசத்துடன் பொது நிகழ்வில் கலந்துகொண்ட மகாராணி!!


பிரித்தானியாவின் முடிக்குரிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பொது நிகழ்வு ஒன்றின் போது முதல் முறையாக முகக் கவசம் அணிந்து தோற்றமளித்துள்ளார்.

பிரித்தானியாவில் யுத்தங்களின் போது உயிர்நீத்தவர்கள் ஒவ்வொரு நவம்பர் மாதமும் 11ம் திகதியும் நினைவுகூரப்பட்டு வருகின்றனர்.

குறித்த நிகழ்வினை ஒட்டி வெஸ்ட்மினிஸ்டர் அபே’யினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டாம் எலிசபெத் மகாராணி கலந்துகொண்டார்.

இவ்வார ஆரம்பத்தில் லண்டனில் இடம்பெற்ற குறித்த நினைவு நிகழ்வின்போதே மகாராணி இவ்வாறு முகக் கவசம் அணிந்து தோற்றமளித்துள்ள நிலையில், குறித்த புகைப்படம் தற்போது வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆரம்பிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இளவரசர் சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்கு இலக்காகி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இளவரசரும் சார்ள்ஸின் புதல்வருமான ஹரி, நோய்த் தொற்றுக்கு இலக்காகியிருந்ததாகவும், குறித்த விடயம் அரச குடும்பத்தினரால் மறைக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.