செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை!


கந்த சக்ஷ்டி ஆரம்பித்துள்ள நிலையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி விரதத்தின் ஆரம்ப நாளான நேற்று பெருமளவான அடியார்கள் ஆலயத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும் அவர்கள் வெளி வீதியில் வைத்தே சந்நிதியானை தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆலய வெளி வீதிக்குள் செல்லும் அடியார்களில் ஐந்து நபர்கள் மாத்திரம் உள்நுழைய அனுமதித்து பின்பு உள்நுழைந்த அடியார்கள் வெளியில் வந்ததும் வேறு ஐந்து நபர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரனமாக சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறான நடைமுறை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலய வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.