ஐயப்பன் கோவில் திறப்பு பக்தர்கள் அனுமதி!
மண்டல – மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பட்டுள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் , “ சபரிமலை ஐயப்பன் கோயிலில் 62 நாட்கள் நடைபெறும் மண்டல – மகரவிளக்கு பூஜையையொட்டி நேற்று மாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.
புதிதாக தோ்வு செய்யப்பட்ட மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் பொட்டி மாளிகைபுரம் மேல்சாந்தி எம்.என்.ராஜ்குமாா் ஆகியோா் புனிதமான பதினெட்டாம் படியில் முதலில் ஏறி வழிபாடு நடத்தினா்.
இந்த பூஜை காலத்தில் சுமாா் 85 ஆயிரம் பக்தா்கள் கோயிலுக்கு வருகை தருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னாதாக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை