குடும்ப பெண் மீது வாள்வெட்டு!


யாழ்ப்பணம் – சாவகச்சேரி பகுதியில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

நேற்று அதிகாலை தாசன் தோப்பு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முகங்களை துணிகளால் மறைத்துவாறு கைகளில் கூரிய ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் ஒன்று குறித்த வீட்டிற்குள் புகுந்துள்ளது.

அப்போது வீட்டில் இருந்தவர்கள் அபாய குரல் எழுப்பியதை அடுத்து , கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.