யாழில் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனனர்!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட மற்றும் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

மேலும்,

“யாழில் யாழில் தொற்று சந்தேகத்திலும் மற்றும் ஏனைய தொடர்புகள் காரணமாக சுய தனிமைப்படுத்தப்படுபவர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப் படுத்தலிருந்து சுகாதாரபிரிவினரால் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள்.

தற்போது இந்துக்களின் கந்தசஷ்டி விரதம் இடம்பெறுகின்றமையினால் ஆலயங்களில் ஆலய பூசகர் மற்றும் திருவிழா உபயகாரர் உட்பட ஐவர் மட்டுமே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்குமாறு ஏற்கனவே சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதற்கேற்ப செயற்பட வேண்டும். தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அநாவசிய பயணங்களை தவிர்த்து ஒன்றுகூடுல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்” – என்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.