105 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் 105 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெமடகொடவிலுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பெண் அதிகாரி ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கமைய, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இதுவரையில் 26பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அதிலும் கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலேயே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகம் காணப்படுவதாகவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்றில் சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி வைத்தியர்கள், தாதியர்கள், பொலிஸ் அதிகாரிகள், உயரதிகாரிகள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 663ஆக காணப்படுகின்றது.
இவர்களில், நான்காயிரத்து 399பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் இன்னும் ஆறாயிரத்து 244 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை 20பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை