மர்மமான முறையில் உயிரிழந்த 17 வயது இளைஞன்!


பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் வடமேற்கில் இருக்கும் Harrow-ன் Northwick பூங்காவில், கடந்த வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி 3.50 மணியளவில் இளைஞன் ஒருவன் கத்தி குத்து காயங்களுடன் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டான்.

அதன் பின்னர் சுமார் அவர் 40 நிமிடங்கள் கழித்து குறித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இறந்து கிடந்த இளைஞனின் பெயர் Jamalie Matthew எனவும், இவர் Harrow-வில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சட்ட மாணவரான Jamalie Matthew சட்டப் படிப்பை தன்னுடைய லட்சியமாக வைத்து படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் , அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக யாருக்காவது தெரிந்திருந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி மன்றாடுவதாக Jamalie Matthew-வின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.