முல்லைத்தீவில் அதிகரிக்கும் கொரோனா!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - திம்பிலி பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய சுமார் 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதியானது.
முதற்கட்டமாக கடந்த 23ம் திகதி இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் சுமார் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. பின்னர் 24ம் திகதி நடத்தப்பட்ட பரிசோதனையில் 39 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 25ம் திகதி பரிசோதனையில் 13 பேருக்கு உறுதியானது.
மொத்தமாக அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 146 பேரில் 72 பேருக்கு ஏற்கனவே தொற்று உறுதியான நிலையில் மீதமாக உள்ளவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நேற்றய தினம் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் தொற்றுக்குள்ளான 17 பேரில் 15 பேர் வைத்தியசாலைகளுக்கு அனுப்பபட்டிருக்கும் நிலையில், மிகுதி இருவரும் வைத்தியசாலைக்கு அனுப்பபடவுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை