வீதியில் இறப்பவர்கள் தொடர்பாக பொய் பிரசாரம்!!


வீதியில் வீழ்ந்து உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று காரணம் என கூறி சமூக வலைத் தளங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபோன்ற சமூக ஊடக பதிவுகள் குறித்து சி.ஐ.டி. விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வீதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இவ்வாறான போலியான தகவல்களை பரப்பியவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.