கட்டிய மனைவிக்கு போதை மருந்து கொடுத்த கணவன்!!

 


திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்தசொந்த மனைவிக்கு போதை மருந்து கொடுத்து நண்பர்களுடன் கூட்டாக துர்நடத்தைக்கு உட்படுத்திய கணவருக்கு. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 15 வருட சிறைத்தண்டனை வழங்யுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை- மூதூர் பிரதேசத்தில், 2015ம் ஆண்டு 4 மாதம் 14ம் திகதி அன்று, தனது மனைவிக்கு போதை ஊட்டிய நிலையில் கணவர் உட்பட இருவர் இந்த பாதக செயலை செய்ததாக வழக்கு இடம்பெற்று வந்தது.

இவ்வழக்கு தொடர்பில் 2019ம் ஆண்டு நான்காம் மாதம் 30ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் ஆன கணவன் கூட தனது மனைவியின் விருப்பம் இல்லாது உடலுறவு கொள்வது குற்றம் என சட்டம் தெரிவிக்கின்ற நிலையில் தனது திருமணம் செய்த மனைவியை போதையை ஊட்டி நண்பர்களுக்கு விருந்தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இக்குற்றச்சாட்டுக்காக மூதூர்- சிராஜியா நகர் பகுதியைச் சேர்ந்த கணவரான நஜீர் நாபிர் (28வயது) என்பவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட மனைவிக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதிக்குமாறும் அரச செலவாக 5000 ரூபாய் தண்டம் செலுத்துமாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாத கால கடூழிய சிறை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

இதேவேளை மற்றைய எதிரியான மூதூர் சின்ன நகர் பகுதியைச் சேர்ந்த பைசர் பாசிம் (23வயது) என்ற குறித்த எதிரிக்கு சம்பவம் நடைபெறும் போது 18 வயது 24 நாட்கள் எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து இவருக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குமாறும் 5,000 ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறும், செலுத்தத் தவறினால் ஒரு மாதம் கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.

அத்துடன் மூன்றாம் எதிரியான மூதூர் ஆலிம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜமால் தாரிக் (37 வயது) பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடன் சேர்ந்து கூட்டு பாலியலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் பதினைந்து வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் 10 இலட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

அத்துடன் 5000 ரூபாய் தண்டம் செலுத்துமாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் குறித்த எதிரிக்கு ஒரு மாதகால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திறந்த நீதிமன்றில் நேற்றையதினம் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.