ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் மாயம்!
ஹப்புத்தளை ரத்கரவ்வ ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் இன்று முற்பகல் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாகவும் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகம என்ற இடத்தைச் சேர்ந்த சந்துன் தில்ஷான் என்ற 26 வயது நிரம்பிய இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளைப் பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் மரக் கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்த அடிப்படையில் மரங்கள் வெட்டும் தொழிலில் ஈடுபடுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைருடன் எட்டுப் பேர் குளிக்கச் சென்றிருந்த போதிலும் இவர் மட்டுமே நீரில் மூழ்கியுள்ளார்.
இது குறித்து ஹப்புத்தளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசாரும், தியத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த சுழியோடிகளும் ஆற்றிற்கு சென்று மாயமானவரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை