போனிகபூரை காணவில்லை - அஜித் ரசிகர்கள்!!

 


அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் டைட்டில் ஒரு வருடங்களுக்கு முன் வெளியான நிலையில் அதன் பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் எந்தவித அப்டேட்டும் இதுவரை வழங்கவில்லை 


அஜித் ரசிகர்கள் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை கடந்த பல மாதங்களாக கேட்டும் எந்தவித அப்டேட்டும் வராததால் வெறுத்துப் போய் உள்ளனர். ’வலிமை’ படத்திற்கு பின் ஆரம்பிக்கப்பட்ட பல படங்களின் அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ’வலிமை’ படம் குறித்த ஒரு சிறிய தகவலைகூட படக்குழுவினர் வெளியிடாமல் உள்ளது


ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைகளால் ’வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூரை அஜித் ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் வழக்கம் போல் போஸ்டர்களுக்கு புகழ்பெற்ற மதுரையில் அஜீத் ரசிகர்கள் ’போனிகபுரை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


கடந்த 8 மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் அஜித்தின் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை கேட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ள அஜித் ரசிகர்கள் ’போனிகபூரை காணவில்லை என்றும் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றோம் என்றும் அந்த போஸ்டரில் அஜித் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் மதுரையின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.