ரஜினி-அமித்ஷா சந்திப்பு நடக்குமா!!

 


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரவிருக்கும் நிலையில் முதல்வர், துணை முதல்வர் உள்பட பல பிரபலங்கள் அவரை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.


இந்த நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகையின்போது அவர் ரஜினியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அமித்ஷாவின் நிகழ்ச்சி நிரலில் ரஜினியை சந்திக்க அவர் போயஸ் தோட்டம் போகவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அமித்ஷா தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா-ரஜினி சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உறுதியளித்த நிலையில் தற்போது உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி-அமித்ஷா சந்திப்பு நடந்தால் அது நிச்சயம் மரியாதை நிமித்த சந்திப்பாக மட்டும் இருக்காது என்றும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.