பாரதப்போரும் பழந்தமிழரும் - கட்டுரை

முன்னுரை

உலகின் தலைசிறந்த காப்பியமாக மகாபாரதம் விளங்கி வருகின்றது. இது இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புடையது. இதன் கருப்பொருள் காலத்தை வென்ற சுவை கொண்டது என்பதால் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி உள்ளது. இக்கதை நடந்த களம் வட இந்தியாவைக் குறிப்பாக இன்றைய ஹரியானா (Haryana) மாநிலத்தைச் சார்ந்தது என்கின்றனர். இதன் நிகழ்வுகள் யாவும் வட இந்தியாவின் அரசு குலங்களை மையமாகக் கொண்டது. இப்போரில் பெரும்பான்மையான அரசு குலங்கள் கலந்து கொண்டன. ஆனால் தென்னிந்தியாவில் தமிழரைத் தவிர வேறு எவரும் இப்போரில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தின் முடியுடை வேந்தர் மூவருமே இப்போர் குறித்து மூன்று விதமான முடிவெடுத்தனர். அம்முடிவு யாது? என்பதும், பாரதப்போரில் பழந்தமிழரின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? என்பதையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மகாபாரதப் போர்

மகாபாரதப் போர் ஆரிய இனத்தவரிடையே நடைபெற்ற பூசல்களை மையமாகக் கொண்டது. மத்திய ஆசியாவில் இருந்து கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு போந்த ஆரியர்கள் கைபர், போலன், குர்ரம் போன்ற கணவாய்களின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து வளமான கங்கைச் சமவெளியை அடைந்தனர். அங்கு அவர்கள் தம் நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலையாகத் தங்கி விவசாயம் புரிந்தனர். பின்னர் அவர்கள் வடஇந்தியா முழுவதும் பரவித் தமக்கெனப் பல அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர். காடுகளை அழித்து நிலங்களாக்கி நாட்டைப் பெருக்கினர். அங்கு ஏராளமான அரசுகள் புதியதாய்த் தோன்றின. அவை பதினாறு மகாஜனபதங்கள் (Sixteen Mahajanapathas) என்று அழைக்கப்பட்டன. காலப்போக்கில் இவ்வரசுகள் ஒன்றுடன் ஒன்று பூசலிடத் துவங்கின. போட்டியும், பொறாமையும் அங்கு மலிந்து காணப்பட்டன. அக்காலத்தில் தேவர்களும், முனிவர்களும், மந்திரத்தந்திரங்களும் அவர்களை ஆட்டிப்படைத்தன. இவ்வரசுகளின் பூசல்களே மகாபாரதப் போராக முடிவடைந்தது. குரு நாட்டில் நிகழ்ந்த அரசுரிமைப் போட்டியில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே மூண்ட போட்டி பெரும் போராக வெடித்தது.

போட்டியிலும், பொறாமையிலும் சிக்கித் தவித்த பல்வேறு அரசு குலங்கள் இப்போரில் எதிரெதிர் திசையில் நின்று போரிட்டன. குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்ற 18 நாள் யுத்தத்தில் கௌரவர் தரப்பில் 12,02,285 காலட் படையினரும், 7,21,710 குதிரைப் படையினரும், 2,40,570 யானைப் படை வீரர்களும், ஆக மொத்தம் 21,64,565 வீரர்கள் போரிட்டனர். பாண்டவர் பக்கம் 7,65,450 காலாட் படையினரும், 4,59,270 குதிரைப் படையினரும், 1,53,090 யானைப் படையினரும், ஆக மொத்தம் 13,77,810 வீரர்கள் போரிட்டனர். போரின் முடிவில் ஒரு சிலர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போரில் பாண்டவர் வெற்றி பெற்றனர். கௌரவர் அனைவரும் அழிந்தனர். இப்போரில் கலந்து கொள்ளத் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து அரசு குலங்களுக்கும் இரு தரப்பினரும் அழைப்பு விடுத்தனர். தமிழர்கள் மட்டுமே இப்போரில் கலந்து கொண்டு சிறப்பு பெற்றனர்.

தமிழரும் வடஇந்தியாவும்

தமிழர்கள் வீரம் மிகுந்தவர்கள். அகத்தே காதலையும், புறத்தே வீரத்தையும் உயிரெனக் கொண்டவர்கள். பல தமிழ் மன்னர்கள் போக்குவரத்து வசதிகளற்ற அக்காலத்திலும் வடஇந்தியாவின் மீது படையெடுத்து அங்குள்ள ஆரிய மன்னர்களை வென்று இமயத்தில் தம் கொடியைப் பொறித்துவிட்டு வெற்றியுடன் திரும்பினர். சான்றாகச் சேரமன்னன் நெடுஞ்சேரலாதன் இமயப் படையெடுப்பை மேற்கொண்டு பெருவெற்றி பெற்று அங்குத் தன் இலச்சினையைப் பொறித்தான்.

“ஆரியது வன்றிய பேர் இசைஇமயம்
தேன் அம்குமரியோடு ஆயிடை
மன்மீக் கூறுநர்மறம் தபக் கடந்த” (பதிற்:11:23-25)

சேரன் செங்குட்டுவன் வடஇந்தியா வரை சென்று கனக, விசயரை வென்று இமயத்தில் சேரரின் விற்கொடியைப் பொறித்து வெற்றியுடன் திரும்பினான்.

“வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த
எழு உறழ்தினி தோள் இயல் தோக் குட்டுவன்” (சிறுபா:48-49)

சோழ மன்னன் கரிகாலன் வடஇந்தியப் படையெடுப்பை மேற்கொண்டு அனைத்து அரசுகளையும் வென்று தன் புலிச் சின்னத்தை இமயத்தில் பொறித்தான்.

“என்று முள்ளவின் நகர் கலியுகத்து
லிலங்கு வேறுகரி காற்பெரு வளத்தோன்
வற்றி றற்புலி யிமயமால் வரைமேல்
வைக்க வெகுவோன் றன்க்கிதன் வளமை” (பெரிய புராணம்:திருக்குறிப்புத் தொண்டர் புராணம்:82)

இராசேந்திரச் சோழன் கங்கை படையெடுப்பை மேற்கொண்டு வடஇந்திய மன்னர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்து “கங்கை கொண்ட சோழபுரம்” என்ற நகரை நிர்மாணித்தான்.(SII.Vol:5,No:124). இவ்வாறு தமிழ் மன்னர்கள் வடஇந்தியா மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டனர். அவ்வாறே பாரதப் போரிலும் தென்னிந்திய அரசு குலங்கள் பங்கேற்காமல் ஒதுங்கிய போதிலும், முடியுடை வேந்தர்கள் மூவரும் வெவ்வேறு முடிவுகளை மேற்கொண்டனர்.

பாரதப் போரில் தமிழர் பங்களிப்பு

பாரதப் போரில் சந்திரக் குலத்தைச் சார்ந்த பாண்டியர்கள் படையுடன் கலந்து கொண்டு பாண்டவருக்கு ஆதரவாகப் போரிட்டனர். சூரியக் குலத்தைச் சார்ந்த சோழர்கள் இப்போரைப் புறக்கணித்தனர். எம்மரபையும் சாராத சேரர்கள் இப்போரில் நடுநிலை வகித்து இருவருக்கும் உதவினர். குரு வம்சத்தினர் சந்திரக் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் குல அடிப்படையில் பாண்டியரும் பாண்டவரும் உறவினர் ஆவர். பாண்டவர்களில் ஒருவனான அர்ஜீனன் தன் தீர்த்த யாத்திரையின் பொழுது பாண்டிய இளவரசி ஒருத்தியை மணந்தது இதை உறுதி செய்யும். குரு வம்சத்திற்கு உறவினரான பாண்டிய மன்னர்கள் தம்மை “பஞ்சவன்” என்று பெயரைச் சூட்டிக் கொண்டனர். பஞ்சப் பாண்டவரை உறவினராகக் கொண்டதால் அவர்கள் இப்பெயர் பெற்றனர். இச்செய்தியை அவர்களின் சின்னமனூர் செப்பேடு;

“பராங்குசன் பஞ்சவன் தோன்றலும்”

என்ற அழகாக உரைக்கின்றது. இது தவிரப் பாண்டிய அரசர்கள் தங்களை “திங்கள் செல்வன்” என்று கூறிக்கொள்கின்றனர்.

பாண்டியர்கள் நீதி நெறி தவறாதவர்கள் என்பதால் அவர்கள் அதர்மிகளான கௌரவர்களுடன் சேராமல், பாண்டவர் பக்கம் படையுடன் சென்று போரிட்டுப் புகழ்பெற்றனர். பாண்டவரின் யானைப்படைக்குப் பாண்டியரே தலைமை தாங்கிப் போரிட்டனர். அத்துடன் போரில் வீரம் மிகுந்த அர்ஜீனனை நெருக்கடியான நேரத்தில் பாண்டிய மன்னன் உயிர் காத்தான் என்பதைத் தளவாய்புரச் செப்பேடும் குறிப்பிடுகின்றது.

“தார்தராஷ்டிரர் படை முழுவதும் களத்தவியப்
பாரதத்துப் பகடோட்டியும்
மடைம்குவேல் வானரத்வஜன் (அர்ஜீனன்)
வசுசாபம் அகல்வித்து”

இச்செய்தியை உறுதிசெய்யும் அவர்களின் சின்னமனூர் செப்பேடும்,

“விஜயனை வசுசாபம் நீக்கியும்”

என்றுரைக்கின்றது. அர்ஜீனன் தன் தீர்த்த யாத்திரையின் போது பாண்டிய இளவரசி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதால், அர்ஜூனனின் உயிரைக் காக்கும் முனைப்புடன் பாண்டிய மன்னர் செயல்பட்டனர். இவ்வாறு பஞ்சபாண்டவரின் வெற்றிக்குத் தமிழ் வேந்தரான பாண்டியர்கள் உறுதுணையாகத் திகழ்ந்தனர். அதே சமயம் 18 நாள் தர்ம யுத்தத்தில் பங்கேற்ற பாண்டவர் படைக்கும் கௌரவர் படைக்கும் சேரமன்னன் உதியன் சேரல் என்பவன் உணவளித்தான். இருதிறத்தாருக்கும் உணவளித்தால் அவன் “பெறுஞ் சோற்று உதியன்” என அழைக்கப்பட்டான்.

“அலங்கு உள்ள புரவி ஐவரோடு சினைஇ
நிலம் தலைகொண்ட பொலம் பூந்தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து எழிய
பெருஞ் சோற்று மிகப் பதம் வரையாது
கொடுத்தோய்” (புறம்:2:13-16)

இப்போரில் அவன் நடுநிலை வகித்து அன்னதானம் அளிக்க எண்ணி இருதிரத்தாற்கும் உணவளித்தான். அவ்வளவு பேருக்கும் உணவுப் பொருட்களைத் தமிழகத்திலிருந்து கொண்டு செல்வது இயலாத காரியம் என்பதால், பணத்தைக் கொண்டு சென்று தேவையான பொருளை அங்கேயே பெற்றுப் போர்க்களத்திலேயே உணவைத் தயாரித்து இருதிறத்தாருக்கும் அளித்திருத்தல் வேண்டும். இப்போரில் நேரடியாக யாருடனும் அவன் சேராததால் அவன் பெயர் மகாபாரதத்தில் குறிப்பிடப்படவில்லை. போரில் பாண்டியனும் வீர மரணம் எய்தியிருக்கக்கூடும். அதனால் தான் போரின் முடிவில் உயிர் பிழைத்த ஒரு சிலரில் பாண்டிய மன்னனின் பெயர் இடம் பெறவில்லை. சிறப்பாக உணவளித்ததன் மூலம் தமிழரின் தானமளிக்கும் சிறப்பை இப்போரின் மூலம் சேரமன்னன் நிலைநாட்டினான். வீரமுடன் போரிட்டுப் பாண்டியன் வீரமரணமடைந்ததால் தமிழரின் வீரப்பண்பும் இப்போரில் வெளிப்பட்டது. இவ்வாறு தமிழ் மன்னர்கள் பாரதப் போரில் வெவ்வேறு நிலையில் நின்று தம் பங்களிப்பைச் சிறப்பாக நல்கிப் புகழ் பெற்றனர்.

முடிவுரை

“உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே” என்பது பழமொழி. அன்னதானம் செய்வது என்பது தமிழர்களின் தர்ம நெறியாகும். இன்று கோயில்களிலும், மடங்களிலும், திருவிழாக்களிலும் அன்னதான நிகழ்வு இன்றியமையாததாக இடம் பெறுகின்றது. இதற்கு முன்னோடியாக மகாபாரதப் போரில் சேரமன்னன் அன்னதானம் அளித்துச் சிறப்பு பெற்றனர். நல்லவர், தீயவர் என்று பேதம் பாராமல் அனைவருக்கும் உணவளித்தல் அன்னதானத்தின் சிறப்பாகும். இதைச் செம்மையுடன் சேரமன்னன் செய்து முடித்தான். ஆனால், தர்மத்தை உயிர் போன்று போற்றிய பாண்டிய மன்னர்கள் வேறு விதமான நிலைப்பாட்டைக் கைகொண்டு, இப்போரில் கலந்து கொண்டு, பஞ்சபாண்டவர் பக்கம் நின்று அவர்கள் வெற்றிக்குத் துணை நின்றனர். குரு வம்சத்தவரான பாண்டவர், கௌரவர் இருவருமே அவர்களுக்கு உறவினர் என்றாலும் தர்மத்தின் பக்கம் நின்று போரிட்ட அவர்களின் திறன் போற்றுதலுக்குரியது. பாரதப் போரில் உணவளித்தான் மூலமும், பாண்டவர் பக்கம் நின்று வெற்றிக்கு உதவியதன் மூலமும் இரு வேறு நிலைப்பாட்டை எடுத்த தமிழ் மன்னர்கள் மதியூகம் சிறப்பிற்குரியது. இவ்வாறு இம்மாபெரும் போரில் பங்கேற்றுத் தமிழரின் சிறப்பைப் பாரதம் முழுவதும் இவ்விரு வேந்தர்களும் நிலைநிறுத்தினர்.

சுருக்கம் (Abbrevations)

1.SII-South Indian Inscriptions

பார்வை நூற்பட்டியல்

1. பரிமணம்.அ.மா. &பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),புறநானூறு, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்.

2.பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), பதிற்றுப் பத்து, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்.

3.பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), சிறுபாணாற்றுப் படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்.

4. பெரிய புராணம்,(1970), ஸ்ரீ வைகுண்டம்: திருப்பனந்தாள் காசிமட வெளியீடு.

5. இராமன்.கே.வி, (1977), பாண்டியர் வரலாறு, சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

6. துரைசாமிப் பிள்ளை. ஒளவை, (2002), சேர மன்னர் வரலாறு, சென்னை: வள்ளுவர் பண்ணை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.