உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இருவர்!

 கென்யா நாட்டில் 30-கும் மேற்பட்ட கிராம மக்களால் ஆண்கள் இருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

கென்யாவின் நரோக் மாவட்டத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவராகும் கனவுடன் இருந்தவர் 17 வயதான மெர்சி சிலாவ் பரேயோ.

திடீரென்று இவர் மாயமான நிலையில் மெர்சியின் பெற்றோர் பொலிசாரை நாடி புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், அருகாமையில் உள்ள வனப்பகுதியில் இருந்து இளம்பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.

அவரது உடலில் ஐந்து முறை கத்தியால் தாக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி, தலை சிதைந்த நிலையிலும், ஒரு கண் தோண்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

உடனடியாக அந்த சடலத்தை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், உடற்கூறு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

அதில், குறித்த இளம்பெண் கூடு வன்புணர்வுக்கு இரையாக்கப்பட்டது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த மெர்சியின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், மெர்சி மீது தாக்குதல் நடத்திய நபரை அடையாளமும் கண்டுள்ளனர்.

தொடர்ந்து அந்த நபரை சுற்றி வளைத்த கிராம மக்கள், அவருக்கு உதவிய நபரையும் ஒன்றாக கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

குற்றுயிராக கிடந்த அந்த இருவரையும் சுமார் 30-கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து உயிருடன் கொளுத்தியுள்ளனர்.

ஆனால், கொல்லப்பட்ட மெர்சியும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபரும் ஏற்கனவே தொடர்பில் இருந்துள்ளனர் எனவும்,

மெர்சி கொல்லப்பட்ட அதே நாளில் இருவரும் தனியாக சந்தித்துக்கொள்ள முடிவு செய்திருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் கிராம மக்கள் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்த நபரே மெர்சியை கொன்றார் என தற்போது உறுதி செய்ய முடியாது எனவும், அது தொடர்பில் விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.