அதிர்ச்சியடைந்து உயிரை விட்ட மனைவி!


 இந்தியாவில் வேறு பெண்ணுடன் கணவர் இருக்கும் வீடியோவை பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

சிக்கமகளூருவை சேர்ந்த ரஞ்சிதா (23) என்ற பெண்ணுக்கும் அருண்குமார் (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு முன்பே அருண்குமாருக்கும், அகரேஹள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் இருவரும் அடிக்கடி சந்தித்து நெருக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை அருண்குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருண்குமார், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை ரஞ்சிதா பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு இந்த விவகாரம் குறித்து ரஞ்சிதாவுக்கும், அருண்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது ரஞ்சிதாவிடம் உயிரை விட்டுவிடும்படி அருண்குமார் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ரஞ்சிதா தனது சகோதரர் சேத்தனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்ய போவதாக கூறிவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ரஞ்சிதாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

இதனிடையில் பொலிசுக்கு பயந்து அருண்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார், இதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.