காத்தான்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!


 மட்டக்களப்பு மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து தனியார் பஸ் மூலம் காத்தான்குடிக்கு வந்து பின்னர் ஒல்லிக்குளம் சென்று வீடு ஒன்றில் தனிமையில் இருந்தவருக்கே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் காத்தான்குடியை சேர்ந்த 38 வயதுடைய பெண் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

அன்று காலை பஸ்ஸில் இருந்து இறங்கிய குறித்த பெண்ணை அழைத்துச்சென்று வீட்டில் தங்கவைத்த பெண்னொருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் அன்றைய தினம் ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளதாகவும் சுகாதார பகுதியினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் இந்த பெண்ணுடன் வேலை செய்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பகுதியினர் தெரிவித்தனர்.

Blogger இயக்குவது.